அரியலூர் மாவட்டத்தில் 14ம் தேதி 201 கிராம ஊராட்சிகளில் சமத்துவ பொங்கல் விழா

அரியலூர், ஜன.12: அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாட்டில் பொங்கல் திருநாள் ஒவ்வொரு வருடமும் தை முதல் நாளன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டும் சுத்தம், சுகாதாரம் பேணும் விதத்திலும் மற்றும் சமத்துவத்தை கடைப்பிடிக்கும் விதமாக அரியலூர் மாவட்டத்தில் 201 கிராம ஊராட்சிகளிலும், பொங்கல் திருவிழாவானது சமத்துவ பொங்கல் விழாவாக வரும் 14ம் தேதி அன்று சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. சமத்துவ பொங்கல் விழா நடைபெறுவதை முன்னிட்டு அரியலூர் மாவட்டத்தின் கிராம ஊராட்சிகளில் உள்ள அனைத்து குக்கிராமங்களிலும் 12.1.2026 மற்றும் 13.1.2026 ஆகிய இரு தினங்களில் தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மைக் காவலர்கள் மூலம் பெரிய அளவில் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

மேலும், சமத்துவ பொங்கல் நாளன்று பள்ளிகள், சாலையோரங்கள், அரசுக் கட்டடங்கள் மற்றும் பல்வேறு திட்டங்கள் மூலம் அரசால் வழங்கப்படும் வீடுகள் முன்பு மரக்கன்றுகளும் நடப்படவுள்ளது. சுய உதவிக் குழுக்களுக்கான கோலப்போட்டிகளும் நடைபெறவுள்ளது.
எனவே 14ம்தேதி நடைபெறவுள்ள சமத்துவ பொங்கல் விழாவில் பொதுமக்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: