பெங்களூரு: கேரள மாநிலப் பள்ளிகளில் முதல் மொழிப்பாடமாக மலையாளத்தை கட்டாயமாக்கும் சட்ட மசோதாவுக்கு கர்நாடகா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கன்னடத்தை தாய்மொழியாகக் கொண்ட மாணவர்கள் இதனால் பாதிக்கப்படுவார்கள் என முதலமைச்சர் சித்தராமையா அறிக்கை வெளியிட்டுள்ளார். காசர்கோடு உள்ளிட்ட எல்லையோர மாவட்டங்களில் கன்னடத்தை தாய்மொழியாகக் கொண்டோர் உள்ள நிலையில், மொழிச் சிறுபான்மையின மக்களின் உரிமைகள் காக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
