அரியலூர் மாவட்டத்தில் இடுபொருள் விற்பனையாளர்களுக்கு பயிற்சி

அரியலூர், ஜன.9: அரியலூர் மாவட்டம் வேளாண்மை அலுவலகத்தில் இடுபொருள் விற்பனையாளர்களுக்கு நேற்று பயிற்சி வழங்கப்பட்டது. அரியலூர் மாவட்டத்தில் ரபி பருவத்தில் நடப்பாண்டில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்களுக்கு இணைய வழி கணக்கெடுப்பு பணி வேளாண்மை மற்றும் சகோதரத்துறை மூலம் நடைபெற்று வருகிறது. இப்பணியை மேற்கொள்ள குறைந்த அளவு தன்னார்வலர்கள் முன் வந்ததால் குறிப்பிட்ட காலத்தில் பணியை முடிப்பதற்கு சிரமமாக உள்ளது.

எனவே, அரியலூர் வேளாண்மை இணை இயக்குநர் தலைமையில் அரியலூர் வட்டாரத்தில் உள்ள அனைத்து இடுபொருள் விற்பனையாளர்களுக்கும் கலந்தாய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. இப்பணியில் ஈடுபடுத்திடும் பொருட்டு இவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அரியலூர் வேளாண்மை இணை இயக்குநர் உலகம்மை முருகக்கனி, அரியலுர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சாந்தி, வேளாண்மை அலுவலர் தரக்கட்டுப்பாடு சுப்பிரமணியன், வட்டார வேளாண்மை அலுவலர் சிந்துஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

Related Stories: