முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழா ‘இது நம்ம ஆட்டம் 2026’ போட்டி: இணையதள முன்பதிவை உதயநிதி தொடங்கி வைத்தார்

சென்னை: தமிழ்நாடு முழுவதும் ஊராட்சி ஒன்றிய அளவில், மாவட்ட அளவில் மற்றும் மாநில அளவில் முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழா – ‘இது நம்ம ஆட்டம் 2026’ போட்டிகள் நடத்த உத்தரவிட்டுள்ளார். இந்த போட்டிகளில் கலந்துகொள்ள விரும்பும் 16 வயது முதல் 35 வயதுடைய விளையாட்டு வீரர், வீராங்கனைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளமான www.sdat.tn.gov.in / www.cmyouthfestival.sdat.in வாயிலாக 6.1.2026 முதல் முன்பதிவு செய்து தனிநபர் மற்றும் குழு போட்டிகளில் கலந்து கொள்ளலாம். முன்பதிவு செய்திட கடைசி நாள் 21.1.2026.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் நடத்தப்படவுள்ள முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழா – ‘இது நம்ம ஆட்டம் 2026’ போட்டிகளுக்கான இணையதள முன்பதிவை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். இந்த முன்பதிவை விளையாட்டு வீரர்கள் தாங்களாகவோ, தங்கள் பள்ளி, கல்லூரி மூலமாகவோ அல்லது தங்கள் கிராம ஊராட்சி மற்றும் மாவட்டத்தின் வாயிலாக செய்துகொள்ளலாம். மேலும், ஆடுகளம் தகவல் தொடர்பு மையத்தை அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 9514000777 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Related Stories: