சுத்தமல்லி முதல் கோட்டியால் வரை 5 கி.மீ தூரத்துக்கு சாலை சீரமைக்கும் பணி

தா.பழூர், ஜன.7: அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே நெடுஞ்சாலைத்துறை ஜெயங்கொண்டம் உட்கோட்ட கட்டுப்பாட்டில் உள்ள மாவட்ட முக்கிய சாலையான தா.பழூர் சாலையில் சுத்தமல்லி முதல் கோட்டியால் வரை 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை சீரமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்த பணிகளை அரியலூர் கோட்ட பொறியாளர் வழிகாட்டுதலின்படி ஜெயங்கொண்டம் உட்கோட்ட உதவி பொறியாளர் தினேஷ்குமார் மற்றும் உதவிக்கோட்ட பொறியாளர் ராஜா ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த சாலை வழியாக கனரக வாகனங்கள் அதிக அளவில் அரியலூர்-கும்பகோணம் நோக்கி பயணித்து வருகின்றன.

இந்நிலையில், சாலை பணியாளர்கள் கொண்டு இந்த சாலை சீரமைக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. சாலை சீரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதால், அரியலூரில் இருந்து கும்பகோணம் செல்லும் வாகன ஓட்டிகளும் சுத்தமல்லியில் இருந்து ஜெயங்கொண்டம், தா.பழூர் செல்லும் வாகன ஓட்டிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

Related Stories: