தா.பழூர், ஜன.7: பொங்கல் பண்டிகையை நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் போன்ற பஞ்ச பூதங்களை ஒப்பிட்டு தமிழர்கள் மகிழ்ச்சியாக கொண்டாடுகின்றனர். உழவையும், உழவுக்கு துணையான கால்நடைகளையும் இதன் மூலம் வழிபாடு செய்து நன்றி செலுத்துகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் தா.பழூர், திருமானூர் ஆகிய ஒன்றியங்களில் உள்ள பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விற்பனை செய்வதற்காக செங்கரும்பு சாகுபடி செய்துள்ளனர்.
தற்போது, தமிழக அரசு நியாய விலைக் கடைகளில் பொங்கல் தொகுப்பு வழங்க நிதி ஒதுக்கீடு செய்து, பொதுமக்கள் பண்டிகையை சிறப்புடன் கொண்டாடும் விதமாக நியாய விலைக் கடைகளுக்கு பொருட்களை கொண்டு செல்லும் பணி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக தா.பழூர் அருகே உள்ள தாதம்பேட்டை நியாய விலைக்கடைக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் சார்பில் கொள்முதல் செய்யப்பட்ட பொங்கல் கரும்பு இறக்கும் பணி நடைபெற்றது.
