- ஒருங்கிணைந்த மேலாண்
- சென்னை
- துணை முதலமைச்சர்
- உதயநிதி ஸ்டாலின்
- சென்னை பெருநகர நீர் வழங்கல் நீர்த்தேக்கங்கள்
- நீர்வளத் துறை
- நீர்வளத்துறை அமைச்சர்
- Duraimurugan
சென்னை: நீர்வளத்துறையின் சார்பில் ரூ.32 கோடியில் கட்டப்பட்டுள்ள சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் நீர்த்தேக்கங்களின் செயல்பாடுகளை கட்டுப்படுத்தும் ஒருங்கிணைந்த மேலாண்மை மைய கட்டிடத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் முன்னிலை வகித்தார். எல்.ஈ.டி திரையின் மூலமாக சென்னையில் உள்ள செம்பரம்பாக்கம், ரெட்ஹில்ஸ் மற்றும் பூண்டி ஆகிய நீர்த்தேக்கங்களின் நீர் இருப்பு குறித்தும், நீர் வெளியேற்றம் குறித்தும் ஏரிகளில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், கணிணி மூலமாக சம்பந்தப்பட்ட ஏரிகளில் குறிப்பிட்ட எண் மதகுகளை திறந்தும், நீர் வெளியேற்றத்தை நிறுத்த முடிகின்றதா என்றும் கணினி மூலம் இயக்கி பரிசோதனை செய்தார். இந்த நிகழ்ச்சியில், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, நீர்வளத்துறை செயலாளர் ஜெயகாந்தன், நீர்வளத்துறை தலைமை பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.
