சென்னை: கில்லர் திரைப்பட படப்பிடிப்பின்போது இயக்குநரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா படுகாயம் அடைந்தார். சென்னை பாலவாக்கத்தில் 3ஆம் கட்ட படப்பிடிப்பு நடந்த போது ரோப் கயிறு உதவியுடன் சண்டைக்காட்சியில் எஸ்.ஜே.சூர்யா நடித்தபோது இரும்பு கம்பியில் மோதி விபத்து ஏற்பட்டது. கம்பி மீது விழுந்ததில் எஸ்.ஜே.சூர்யாவின் இரண்டு கால்களிலும் காயம் ஏற்பட்டது. மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு எஸ்.ஜே.சூர்யாவுக்கு 2 தையல்கள் போடப்பட்டுள்ளன. எஸ்.ஜே.சூர்யாவுக்கு விபத்து ஏற்பட்டதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
