பெரியதாழை புனித காணிக்கை அன்னை ஆலய திருவிழா கொடியேற்றம்

சாத்தான்குளம், ஜன.26: பெரியதாழை யோவான், ஸ்தேவான், புனித காணிக்கை  அன்னை ஆலய திருவிழா நேற்று முன்தினம் இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது.  சாத்தான்குளம் அருகே உள்ள பெரியதாழை யோவான், ஸ்தேவான், புனித காணிக்கை அன்னை ஆலய திருவிழா கடந்த 24ம் தேதி இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிப்.2ம் தேதி வரை 10 நாள்கள் விழா நடக்கிறது. 24ம் தேதி மாலை 6.15 மணிக்கு தூத்துக்குடி ஆயர் இல்ல அருள்பணியாளர் ரூபர்ட் அருள்வளன் தலைமையில் ஜெபமாலை, கொடியேற்றம், நவநாள் திருப்பலி, நற்கருணைஆசீர் நடந்தது. கால்டுவேல் காலனி பங்குதந்தை வில்லியம்சந்தானம் மறையுரை வழங்கினார். இதில் திரளானோர் கலந்து கொண்டனர். 2ம் நாளான 25ம் தேதி முதல் 8ம் நாளான 31ம் தேதி வரை தினமும் காலை நவநாள் திருப்பலி, ஜெபமாலை, நற்கருணைஆசீர், மறையுரை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது. இதில் பங்குதந்தைகள் வைகுண்டம் கிஷோர், ஜீவாநகர் சகேஷ், பொத்தகாலன்விளை வெனி இளங்குமரன், தூத்துக்குடி அம்புரோஸ், செட்டிவிளை ததேயுராஜன், தோமையார்புரம் பிரதீபன், கீழமுடிமன் வினிஸ்டன் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர்.

 9ம்நாளான பிப். 1ம் தேதி காலை 7மணிக்கு தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் தூயவர்கள் யோவான் ஸ்தேவான் புதுப்பிக்கப்பட்ட ஆலய திறப்பு திருப்பலி நடக்கிறது. காலை 9மணிக்கு சிறுமலர் உயர்நிலைப்பள்ளி புதிய கட்டிடம் திறப்பு விழா, மாலை 6.30 மணிக்கு மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன்அந்தோணி தலைமையில் காணிக்கை அன்னை பெருவிழா, மாலை ஆராதனை நடக்கிறது. 10ம் நாளான பிப். 2ம் தேதி காலை 5மணிக்கு மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணிதலைமையில் முதல் திருப்பலி, 6.30மணிக்கு காணிக்கை அன்னை பெருவிழா நடக்கிறது. தூத்துக்குடி ஆயர் இல்ல அருள்பணியாளர் செல்வராசு மறையுரை வழங்குகிறார். விழா ஏற்பாடுகளை ஆலய பங்குதந்தை சுசீலன் தலைமையில் ஊர் கமிட்டி நிர்வாகிகள், பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.  

Related Stories: