சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், “இசையால் எல்லைகளைக் கடந்து, எட்டுத்திக்கும் ஆளும் அன்பு இளவல் இசைப்புயல் திரு.ஏ.ஆர்.ரகுமானுக்கு அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! உங்களது இசையைப் போலவே நீங்களும் என்றும் இளமையோடும் துள்ளலோடும் திகழ்ந்து, தொடர்ந்து சாதனைகளைப் படைத்திட விழைகிறேன்.”எனத் தெரிவித்துள்ளார்.
