திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பள்ளிசாலையில் உள்ள தொப்பம்பட்டி பேருந்து நிறுத்தம் பகுதியில் வேன் மோதியதில் 12ம் வகுப்பு மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். நல்லிக்கவுண்டன் பாளையம் பகுதியை சேர்ந்த கோபிகா தாராபுரம் தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். இன்று வழக்கம் போல் பள்ளிக்கு செல்வதற்கு சாலையை கடக்க முயன்ற போது பாப்பநாயக்கன்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே ஏற்பட்ட விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும், விபத்து ஏற்படுத்திய டிராவல்சில் பயணம் செய்த 16 பேருக்கு தாராபுரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்பு அவர்கள் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். உயிரிழந்த மாணவியின் உடலை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து அலங்கியம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
