பூளவாடியில் 22ம் தேதி அரசு பள்ளி புதிய கட்டிடம் திறப்பு

 

உடுமலை, ஜன. 6: பூளவாடி அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர் அறக்கட்டளை நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் இணைய வழியில் நடைபெற்றது. பணிநிறைவு தலைமையாசிரியர் தண்டபாணி தலைமை வகித்தார்.கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்: வரும் 22ம் தேதி சுமார் ரூ.10 லட்சம் செலவில் புனரமைப்பு செய்யப்பட்ட கட்டிட திறப்புவிழா மற்றும் முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்துவது. அதற்கு திருப்பூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோரை அழைப்பது,முன்னாள் மாணவர் அறக்கட்டளைக்கு 1000 ஆயுள் சந்தாதாரர்கள் சேர்ப்பது. அதை நிரந்தர வைப்பு நிதியாக வைத்து பள்ளியின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வது. ஏற்கனவே 260 உறுப்பினர்கள் சேர்ந்துள்ள நிலையில் சேர்க்கையை தீவிரப்படுத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: