ஆயிரம் அமித்ஷா வந்தாலும் தமிழ்நாட்டில் எதுவும் மாறாது: சீமான் பேட்டி

திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: திராவிடமும், தமிழ் தேசியமும் ஒன்றுதான் என திருமாவளவன் தற்போது பேசுகிறார். ஆனால் திராவிடம், தமிழ் தேசியத்திற்கு எதிரானது என கற்பித்தவர் திருமாவளவன் தான். திராவிடம் தமிழை எங்கே காக்கிறது. தமிழ்நாட்டில் தமிழ் படிக்கவோ, பேசவோ, எழுதவோ தெரியாதவர்கள் தான் அதிகம் இருக்கிறார்கள்.
இந்த மண்ணில் நிலவுகிற திராவிடம், இந்தியம் என்கிற ஆட்சி முறையை மாற்றுவது தான் மாற்றம். கூட்டணி மாறுவதால் ஆட்சி மாறும், ஆனால் ஆட்சி முறை மாறாது. காங்கிரஸ், பாஜ, திமுக, அதிமுகவிற்கு எந்த கோட்பாடு மாற்றமும் கிடையாது. திமுகவிற்கு மாற்று அதிமுக என கூறுவது வெறும் வார்த்தையில் தான், கொள்கையில் எந்த மாற்றமும் கிடையாது. திமுகவிற்கும், அதிமுகவிற்கும் இடையே தான் போட்டி உள்ளது. ஆயிரம் அமித்ஷாக்கள் வந்தாலும் எந்த மாற்றமும் இருக்காது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: