சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று வரை இயல்படை விட 3 % குறைவாக பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் என்பது அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை ஆகும். அந்த வகையில் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய வடகிழக்கு பருவ மழை இந்த மாதம் முடிவடைய உள்ளது. இந்த ஆண்டில் வடகிழக்கு பருவ மழை தமிழகத்தில் ஆங்காங்கே பரவலாக பெய்தது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் இயல்பான நிலையில் 440 மி.மீ. மழை பொழியும் நிலையில் இன்று வரை 427 மி.மீ. மட்டுமே பெய்துள்ளது. சென்னையில் வடகிழக்கு பருவமழை இன்று வரை இயல்பை விட 10 சதவீதம் குறைவாக பெய்துள்ளது. சென்னையில் இயல்பான நிலையில் 807 மி.மீ. மழை பொழியும் நிலையில் இன்று வரை 725 மி.மீ. மட்டுமே மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
