பாலாற்றில் மூழ்கி 2 இளம்பெண்கள் பரிதாப பலி

வாணியம்பாடி: திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அருகே உள்ள புதுப்பேட்டை பகுதியை சேர்ந்தவர்கள் கிருஷ்ணன், ஜெயகாந்தன். இவர்கள் நேற்று தங்கள் குடும்பத்துடன் வாணியம்பாடி அடுத்த திம்மாம்பேட்டை அருகே உள்ள தமிழக-ஆந்திர எல்லையான தகரகுப்பம் மரிமான்ரேவ் பகுதியில் உள்ள பாலாற்றில் குளிக்கச்சென்றனர். அப்போது திடீரென கிருஷ்ணன் மகள் கோகிலா(18), ஜெயகாந்தனின் மனைவி சுபஸ்ரீ(22) ஆகிய இருவரும் பாலாற்றில் மூழ்கினர்.

இவர்களது அலறல் சத்தம் கேட்ட அப்பகுதி மக்கள் இறங்கி மீட்க முயன்றனர். ஆனால் அதற்குள் இருவரும் நீரில் மூழ்கினர். இதையடுத்து சுமார் அரைமணிநேரம் போராடி இருவரையும் மீட்டு பைக் மூலம் நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். ஆனால் அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் வழியிலேயே இருவரும் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்த திம்மாம்பேட்டை போலீசார் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

Related Stories: