கரூர் ஆண்டாங்கோயில் பகுதியில் பாதாள சாக்கடை குழியால் விபத்து ஏற்படும் அபாயம்

கரூர், ஜன. 22: கரூர் ஆண்டாங்கோயில் கிழக்கு நியூ சக்தி நகர்ப்பகுதியில் பாதாள சாக்கடை குழியை மூட தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் ஈரோடு சாலையில் ஆண்டாங்கோயில் கிழக்கு ஊராட்சி பகுதி உள்ளது. இந்த பகுதியில் நியூ சக்தி நகர்ப்பகுதிக்கான சாலை பிரிகிறது. ஏராளமான குடியிருப்புகள் இந்த பகுதியில் உள்ளன.இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பாதாள சாக்கடை பணிகள் மேற்கொள்ளப்பட்டு, பின்னர், குழியை அதற்கான மூடி கொண்டு மூடாமல் பாதியில் விடப்பட்டதோடு, செடி கொடிகளை வைத்து மறைக்கப்பட்டுள்ளது. இதனால், இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கிக் கொள்ள வாய்ப்புகள் உள்ளது எனக் கூறப்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குழியை விரைந்து மூட தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என பகுதியினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories:

>