தோஹா: உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள், கத்தாரின் தோஹா நகரில் நடந்து வருகின்றன. நேற்று முன்தினம் நடந்த முதல் நாள் போட்டியில் 5 சுற்றுகளுக்கு பின், தமிழகத்தை சேர்ந்த உலக செஸ் சாம்பியன் குகேஷ், இந்திய கிராண்ட் மாஸ்டர் அர்ஜுன் எரிகைசி, நார்வேயை சேர்ந்த உலகின் நம்பர் 1 வீரர் மேக்னஸ் கார்ல்சன் ஆகியோர், 4.5 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தனர்.
இவர்களை தவிர, பிரான்ஸ் கிராண்ட் மாஸ்டர் மேக்சிமே வஷியர் லாக்ரேவ், ரஷ்ய கிராண்ட் மாஸ்டர் விளாடிஸ்லேவ் ஆர்டெமிவ் ஆகியோரும் 4.5 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளனர். அதேசமயம், உலக ரேபிட் செஸ் நடப்பு சாம்பியனான, ரஷ்ய கிராண்ட் மாஸ்டர் வோலோடார் முர்ஸின் (18), முதல் சுற்றில் தோற்றதால், வெறும் 2 புள்ளிகள் மட்டுமே பெற்றுள்ளார்.
