×

செவிலியர்கள் தொடர் போராட்டம்

புதுக்கோட்டை, டிச. 25: புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தமிழ்நாடு செவிலியர் மேம்பாட்டு சங்கம் சார்பில் கடந்த 19ம் தேதி முதல் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும், தேர்தல் கால வாக்குறுதியான 365 படி எம்ஆர்பி தொகுப்பூதிய செவிலியர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

பட்டப் படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு முடித்த செவிலியர்களுக்கு ஊதியம் உயர்வு வழங்கிட வேண்டும், கொரோனா காலகட்டத்தில் பணி செய்து, பணி நீக்கம் செய்யப்பட்ட அனைத்து செவிலியர்களுக்கும் மீண்டும் பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 50க்கும் மேற்பட்ட செவிலியர்கள் இந்த தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்‌.

இரவு பகலாக செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரக்கூடிய நிலையில் இன்று 6வது நாளாக போராட்டம் தொடர்ந்து வருகிறது. குறிப்பாக நேற்று நடைபெற்ற போராட்டத்தில் செவிலியர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி, பதாகைகளாக ஏந்தி முழக்கங்களை எழுப்பினர்.

 

Tags : Pudukkottai ,Pudukkottai Government Medical College Hospital ,Tamil Nadu Nurses Development Association ,
× RELATED மினி பஸ்சில் இறந்து கிடந்த மெக்கானிக்