×

கொள்ளிடத்தில் நெற்பயிர்கள் கணக்கெடுப்பு ஆய்வு

கொள்ளிடம், டிச.25: கொள்ளிடம் வட்டாரத்தில், நடப்பு சம்பா-ரபி 2025 பருவத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்களை கணக்கெடுக்கும் பணி, மின்னணு பயிர் கணக்கெடுப்பு முறையில் நடைபெற்று வருகிறது. கொள்ளிடம் அருகே அகவட்டாரம் வருவாய் கிராமத்தில் நடைபெற்று வரும் இக்கணக்கெடுப்பு பணியினை மயிலாடுதுறை, வேளாண்மை இணை இயக்குநர் விஜயராகவன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உதவி இயக்குநர் எழில்ராஜா மற்றும் விவசாயிகள் உடனிருந்தனர்.

 

Tags : Kollidam ,Samba-Rabi ,Agavattaram ,Mayiladuthurai, Agriculture… ,
× RELATED மினி பஸ்சில் இறந்து கிடந்த மெக்கானிக்