- திமுக
- பெரியார்
- வேதாரண்யம்
- வேதாரண்யம் நகர சபை
- ஜனாதிபதி
- நகரம்
- புகழேந்தி
- ராஜாஜி பூங்கா
- வேதாரண்யம், நாகாலாந்து மாவட்டம்
வேதாரண்யம், டிச.25: நாகை மாவட்டம், வேதாரண்யம் ராஜாஜி பூங்கா அருகே உள்ள பெரியார் சிலைக்கு அவரது நினைவு நாளை முன்னிட்டு வேதாரண்யம் நகர மன்ற தலைவர், திமுக நகர செயலாளர் புகழேந்தி தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில், வேதாரண்யம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் உதயம் முருகையன், கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் சதாசிவம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் வேதரத்தினம், காமராஜ், பொதுக்குழு உறுப்பினர் மறைமலை, திராவிடர் கழக மாவட்ட தலைவர் முருகையன், முன்னாள் மாவட்ட தலைவர் பஞ்சாபிகேசன்,
வழக்கறிஞர் அன்பரசு, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சோழன், மாவட்ட இலக்கிய அணி தலைவர் சீதா கருணாநிதி, முன்னாள் திமுக நகர செயலாளர் கோவிஅன்பழகன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் செல்வராஜ், பகுத்தறிவு கழக மாவட்ட செயலாளர் தட்சிணாமூர்த்தி, உள்ளிட்ட ஏராளமான திமுகவினர், திக கட்சியினர் கலந்து கொண்டு பெரியார் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இதேபோல் தென்னம்பலம், தேத்தாகுடி ஆகிய ஊராட்சிகளில் உள்ள பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
