செங்கோட்டை, டிச.25: சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற்றது. இதில் சங்கரன்கோவில் ஏவிகே பள்ளி மாணவர்கள் சாய் மகதீரா, பிரின்ஸ் தாமஸ், அமுதன் ஆகியோர் வெற்றி பெற்று தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வு பெற்றனர். இதைதொடர்ந்து கடந்த 13ம்தேதி மத்தியபிரதேச மாநிலம் போபாலில் தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் மூவரும் பங்கேற்றனர். இவர்கள் சர்வதேச துப்பாக்கி சுடும் வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்வான மாணவர்களையும், பயிற்சியாளர் மாதவனையும், ஏவிகே கல்வி குழுமத்தின் தலைவர் அய்யாத்துரை பாண்டியன், பள்ளி முதல்வர்கள் சேகர்குமார், லட்சுமணன், ஏவிகே கல்வி குழும நிர்வாக அதிகாரி காளித்துரை மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் பாராட்டினர்.
