×

ஆயுதங்களுடன் ரீல்ஸ் 3 பேர் கைது

தூத்துக்குடி, டிச. 25:தூத்துக்குடி மீளவிட்டான் கக்கன்ஜி நகரை சேர்ந்த சோமசுந்தரம் மகன் முகிலன் (19). இவர் , தனது நண்பர்களான 2 சிறுவர்களுடன் சேர்ந்து இன்ஸ்டாகிராமில் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் விதமாகவும், மோதலை தூண்டும் விதமாகவும் அரிவாளுடன் இருப்பது போன்று ரீல்ஸ் வெளியிட்டு உள்ளார். இதுகுறித்து தெரிய வந்த சிப்காட் எஸ்ஐ ரத்னவேல் பாண்டியன், சிப்காட் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் தனசேகரன் வழக்கு பதிந்து, முகிலன் மற்றும் அவரது நண்பர்களான 2 சிறுவர்களை கைது செய்தனர். இதில் முகிலன், பேரூரணி கிளை சிறையில் அடைக்கப்பட்டார். மற்ற 2 சிறுவர்களும் பாளை கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டனர்.

Tags : Thoothukudi ,Mugilan ,Somasundaram ,Kakanji Nagar ,
× RELATED மினி பஸ்சில் இறந்து கிடந்த மெக்கானிக்