- கிறிஸ்துமஸ் புத்தாண்டு ஈவ்
- நாசரேத் பாலிடெக்னிக் கல்லூரி
- நாசரேத்
- நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம்
- சிஎஸ்ஐ பாலிடெக்னிக் கல்லூரி
- கோயில்ராஜ் ஞானதாசன்
நாசரேத், டிச. 25: நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சிஎஸ்ஐ பாலிடெக்னிக் கல்லூரியில் பணியாற்றும் கடைநிலை ஊழியர்களுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி முதல்வர் கோயில்ராஜ் ஞானதாசன் தலைமை வகித்து ஊழியர்களுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகளை வழங்கினார். கல்லூரி முன்னாள் மாணவர் கென்லி துரைராஜ் மற்றும் கென்னத் துரைராஜ் ஆகியோரின் பெற்றோர் ஆண்ட்ரூஸ்- டிவைன்சி, தாத்தா சாலமோன்ராஜ் ஆகியோர் புத்தாடைகளை அன்பளிப்பாக வழங்கினர். ஏற்பாடுகளை கல்லூரி தாளாளர் நீதிபதி ஜான் சந்தோஷம், முதல்வர் கோயில்ராஜ் மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர்.
