தஞ்சையில் 8 எம்எல்ஏ தொகுதிக்கான வாக்காளர் இறுதி பட்டியல் வெளியீடு 10,00,709 ஆண், 10,55,671 பெண், 168 மூன்றாம் பாலினம்

தஞ்சை,ஜன.21: இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின் பேரில் நேற்று தஞ்சை மாவட்டத்தில் உள்ள 8 எம்எல்ஏ தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில் மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் வெளியிட்டார். அப்போது கலெக்டர் பேசுகையில், தஞ்சை மாவட்டத்தில் கடந்த 16.11.2020 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியலில் 9,80,016 ஆண், 10,26,069 பெண், 130 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 20,06,215 வாக்காளா–்கள் இடம் பெற்றிருந்தனர். கடந்த 16.11.2020 முதல் 15.12.2020 வரை நடைபெற்ற வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த பணிகளின் போது, 1.1.2021 தகுதி நாளாக கொண்டு 18 வயது நிரம்பிய வாக்காளர்களிடமிருந்து வாக்காளர் பட்டியல் சேர்க்க படிவங்கள் பெறப்பட்டு, உரிய விசாரணைக்கு பின் 31,867 ஆண், 39,356 பெண், 43 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 71,266 வாக்காளா–்கள் புதியதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

மேலும், கள விசாரணையில், இறந்த மற்றும் இடம் பெயர்ந்த வாக்காளர்களில் 11,174 ஆண், 9,754 பெண், 5 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 20, 933 பேர் வாக்காளா் பட்டியலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தொகுதியிலுள்ள 291 வாக்கு சாவடியில் 1,28,444 ஆண், 1,30,615 பெண், 15 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2,59,074 வாக்காளா–்கள் உள்ளனர். கும்பகோணம் தொகுதியில் 287 வாக்கு சாவடியில் 1,33,058 ஆண், 1,39,433 பெண், 15 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2,72,506 வாக்காளா–்கள் உள்ளனர்.

பாபநாசம் தொகுதியில் 301 வாக்கு சாவடியில் 1,27,049 ஆண், 1,33,275 பெண், 15 முன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 2,60,339 வாக்காளா–்கள் உள்ளனர்.

திருவையாறு தொகுதியில் 308 வாக்கு சாவடியில் 1,30,419 ஆண், 1,37,358 பெண், 19 மூன்றாம் பாலித்தனத்தவர் என மொத்தம் 2,67,796 வாக்காளா–்கள் உள்ளனர்.

தஞ்சாவூர் தொகுதியில் 286 வாக்கு சாவடியில் 1,38,166 ஆண், 1,50,678 பெண் வாக்காளர்களும், 56 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2,88,900 வாக்காளா–்கள் உள்ளனர்.

ஒரத்தநாடு தொகுதியில் 286 வாக்கு சாவடியில் 1,18,112 ஆண், 1,24,892 பெண், 10 பாலினத்தவர் என மொத்தம் 2,43,014 வாக்காளா–்கள் உள்ளனர். பட்டுக்கோட்டை தொகுதியில் 272 வாக்கு சாவடியில் 1,17,605 ஆண், 1,27,626 பெண், 27 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2,45,258 வாக்காளா–்கள் உள்ளனர்.

பேராவூரணி தொகுதியில் 260 வாக்கு சாவடியில் 1,07,856 ஆண், 1,11,794 பெண், 11 மூன்றாம் பாலினத்தவர் என 2,19,661 வாக்காளா–்கள் உள்ளனர்.

தஞ்சை மாவட்டத்திலுள்ள 8 சட்டமன்ற தொகுதியிலுள்ள வாக்காளர் இறுதி பட்டியிலில் 2291 வாக்கு சாவடிகளில் 10,00,709 ஆண், 10.55.671 பெண், 168 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 20,56,548 வாக்காளா–்கள் இடம் பெற்றுள்ளனா்.

இறுதி வாக்காளர் பட்டியல் தஞ்சை மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்கு சாவடி மையங்களிலும், வாக்காளர்கள் பார்வைக்காக வரும் 21ம் தேதி முதல் வைக்கப்பட்டிருக்கும்.

வாக்காளர் பட்டியலில் பெயா் சேர்க்க, திருத்தம் மேற்கொள்ள தவறியவர்கள் வரும் 21ம் தேதி முதல் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்திட படிவம் எண் 6 ஐ பூர்த்தி செய்து அதனுடன் வயது மற்றும் இருப்பிடத்திற்கான ஆதார ஆவண நகல்களை இணைத்து தங்கள் புகைப்படத்தை படிவத்தில் ஒட்டி தொடர்புடைய தாசில்தார் அலுவலகங்களில் உள்ள தேர்தல் பிரிவில் வழங்கலாம். வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர், முகவரி ஏதேனும் பிழையிருப்பின் மற்றும் புகைப்படம் தவறு எனில் படிவம் எண் 8 ஐ பூர்த்தி செய்து வழங்கலாம்.

மேலும், வாக்காளர்கள் தங்கள் ஆண்ட்ராய்ட்டு அலைபேசியில் Voters Helpline என்ற இந்திய தேர்தல் ஆணையத்தின் இலவச செயலியை பதிவிறக்கம் செய்து கொண்டு அதன் மூலமாகவும், தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா விபரத்தினை அறிந்து கொள்ளலாம். இந்த செயலி மூலம் புதியதாக பெயர் சேர்க்க, நீக்கம் செய்ய, திருத்தம் செய்ய விண்ணப்பிக்கலாம் என்றார். இதில், திமுக மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம், திமுக எம்எல்ஏ துரைசந்திரசேகரன், மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தலைவர் காந்தி, அதிமுக பகுதி செயலாளர் சரவணன், சிபிஎம் ஒன்றிய செயலாளர் செந்தில்குமார். காங்கிரஸ் கட்சி மாவட்ட பொருளாளர் பழனிய்யப்பன், பாஜக சார்பில் ஜெய்சதீஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: