தீவுத்திடலில் நடைபெற உள்ள கண்காட்சிக்கான டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி

சென்னை: சென்னை தீவுத்திடலில் நடைபெற உள்ள 50வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் கண்காட்சிக்கான டெண்டரில், பெங்களூருவைச் சேர்ந்த ‘பன் வேர்ல்ட் அண்ட் ரிசார்ட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட்’ என்ற நிறுவனமும் விண்ணப்பித்தது. அது நிராகரிக்கப்பட்டது. இதை எதிர்த்து, அந்த நிறுவனம் தொடர்ந்த வழக்கு, நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, டெண்டர் ஆவணங்களை தாக்கல் செய்த அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன், முறையாக ஆய்வு செய்த பிறகே டெண்டர் நிராகரிக்கப்பட்டது. டெண்டர் விதிப்படி வருமான வரி கணக்கை மனுதாரர் நிறுவனம் தாக்கல் செய்யவில்லை என்று வாதிட்டார். அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்த நீதிபதி, சட்டவிதிகளை பின்பற்றியே டெண்டர் நிராகரிக்கப்பட்டுள்ளது எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Related Stories: