தேர்தல் முடிந்தவுடன் பாஜவோடு அதிமுக இணையும்; ஜெயலலிதா ஆவிதான் திமுகவுக்கு போக சொல்லுச்சு… மனோஜ் பாண்டியன் பேச்சு

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் ‘‘தமிழ்நாடு தலைகுனியாது’’ பரப்புரை பொதுக்கூட்டம் கீழப்பாவூரில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன் பேசியதாவது: நான் திமுகவில் இணைந்ததற்கு காரணம் எடப்பாடி பழனிசாமி தான். கொள்கை இல்லாத கூட்டத்தில் இருந்து கொள்கை கூட்டத்திற்கு அனுப்பிய எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி சொல்ல வேண்டும். காரணம் திராவிட இயக்கம், திராவிட கொள்கைகளை பாதுகாக்கக்கூடிய தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

2017ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை தமிழகம் டெல்லிக்கு அடகு வைக்கப்பட்டது. தனக்கு ஒரு பிரச்னை வந்தவுடன் எடப்பாடி பழனிசாமி அதிமுகவை ஒன்றிய அரசுடன் அடகு வைத்து அதற்கான பலனை அவர் பெறப்போகிறார். அந்த பலன் என்னவென்றால் 2026ம் ஆண்டு தேர்தல் முடிந்தவுடன் அதிமுக என்ற இயக்கம் இருக்காது என்ற சூழ்நிலையை எடப்பாடி பழனிசாமி உருவாக்கி விட்டார்.

பாரதிய ஜனதாவோடு கூட்டு வைத்திருக்கும் அதிமுக 1972ல் உருவாக்கப்பட்டது அல்ல. இப்போது இருக்கும் அதிமுக 2017ம் ஆண்டு கூவத்தூரில் உருவாக்கப்பட்டது. இந்த கூவத்தூர் அதிமுக நிலைத்து இருக்காது. வரும் 2026ம் ஆண்டு கண்டிப்பாக பாரதிய ஜனதாவோடு இணையும். நான் சென்ற கூட்டத்தில் விளாத்திகுளத்தில் பேசினேன். கொடநாடு கொலைக்கு யார் காரணம்? எடப்பாடி பழனிசாமியை சட்டம் துரத்தி துரத்தி அடிக்கும் என்றேன்.

இதுகுறித்து எடப்பாடி பழனிசாமியிடம் நிருபர்கள் கேட்டபோது, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆவி அவரை திமுகவிற்கு அனுப்பி விட்டது என்றார். ஆனால் ஜெயலலிதாவின் ஆவி தாய் கழகமான திமுகவிற்கு செல்லுங்கள் என்று தான் சொன்னது. கொடநாடு கொலைக்கு யார் பொறுப்பு, கொடநாட்டில் ஒரு மர்மம் உண்டு. அதுகுறித்து விசாரணை வரும் 2026ம் ஆண்டு திராவிட ஆட்சி அமையும் போது வரும். அப்போது அதற்கு தண்டனை உண்டு. இவ்வாறு அவர் பேசினார்.

 

Related Stories: