மடிக்கணினி திட்டத்தை முடக்க நினைக்கும் எடப்பாடி பழனிசாமி கனவு பலிக்காது: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

சென்னை: மடிக்கணினி திட்டத்தை முடக்க நினைக்கும் எடப்பாடி பழனிசாமி கனவு பலிக்காது என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர்; காலை உணவுத் திட்டம், புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன் போன்ற திட்டங்களால் தமிழ்நாடு கல்வியில் சிறந்து விளங்குகிறது. கல்லூரி மாணவர்களின் கல்வி கனவை எப்படி சிதைக்கலாம் என சிந்திப்பதை எடப்பாடி கைவிடவேண்டும். திராவிட மாடல் 2.0 அரசு அமையும்போது மாணவர்களுக்கு பயனளிக்கும் இன்னும் பல திட்டங்கள் செயல்படுத்தப்படும். சில வாரங்களில் மடிக்கணினி வழங்க உள்ள நிலையில் பழனிசாமியின் நோக்கம் என்ன என்று மக்களுக்கு தெரியும்.

மடிக்கணினி திட்டத்தை முடக்க நினைக்கும் எடப்பாடி பழனிசாமி கனவு பலிக்காது. தமிழ்நாட்டு மக்களும் மாணவர்களும் சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமிக்கு நிச்சயம் உரிய பாடம்
புகட்டுவார்கள். திராவிட மாடல் அரசு நிச்சயமாக மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கத்தான் போகிறது. வரும் பிப். மாதத்துக்குள் 10 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப்கள் வழங்கப்படும். மடிக்கணினி திட்டம் தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்ல உள்ளது. லேப்டாப் வழங்கும் திட்டம் தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும்.

லேப்டாப் திட்டத்தை 2019ல் பாதியிலேயே கைவிட்டு ஏமாற்றியவர் எடப்பாடி பழனிசாமி என்பதை நாடறியும். எடப்பாடி பழனிசாமி ஏதேதோ கதை சொல்கிறார், அவரது எண்ணம் ஒருபோதும் பலிக்காது என்று கூறினார்.

Related Stories: