சாத்தான்குளம் அருகே கார்மோதி தொழிலாளி படுகாயம்

சாத்தான்குளம், ஜன. 20: சாத்தான்குளம் அருகே பைக் மீது கார் மோதியதில் தொழிலாளி பலத்த காயமடைந்தார். வைகுண்டம் அருகே  உள்ள கருங்குளம் பால் மகன் விக்கி (43). கூலித் தொழிலாளியான இவர் பேய்க்குளம் பகுதியில் இருந்து முனைஞ்சிப்பட்டியை  நோக்கி அவரது  பைக்கில் சென்று கொண்டிருந்தார். செங்குளம் விலக்கு பகுதியில் சென்ற போது எதிரே வந்த கார் பயங்கரமாக பைக் மீது மோதியது. இதில் விக்கி தூக்கிவீசப்பட்டு பலத்த காயமடைந்தார். காயமடைந்த அவர் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து சாத்தான்குளம் போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: