சென்னை: திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. டி.கே.எஸ்.இளங்கோவன், அமைச்சர்கள் கோவி செழியன், பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் குழுவில் உள்ளனர். டி.ஆர்.பி.ராஜா, எம்.எம்.அப்துல்லா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், எழிலன் ஆகியோரும் குழுவில் உள்ளனர். கார்த்திகேய சிவசேனாபதி, தமிழரசி ரவிக்குமார் ஆகியோரும் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்
