முன்னாள் அமைச்சர் தலைமையில் எம்.ஜி.ஆர். படத்துக்கு மாலை

ஈரோடு, ஜன. 19: எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பெருந்துறையில் கொண்டாடப்பட்டது. முன்னாள் அமைச்சரும், பெருந்துறை எம்.எல்.ஏ.வுமான  தோப்பு வெங்கடாச்சலம் தலைமையில் எம்.ஜி.ஆரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. விழாவில் ஒன்றிய செயலாளர் விஜயன், ஊராட்சி ஒன்றிய தலைவர் சாந்திஜெயராஜ், சிஎம்எஸ் துணைத்தலைவர் ஜெகதீஷ், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பாலகிருஷ்ணன், ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவர் பெரியசாமி, மாவட்ட ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் உமாமகேஸ்வரன், ஊராட்சி மன்ற தலைவர்கள், முன்னாள் ஊராட்சி செயலாளர்கள், கூட்டுறவுசங்க தலைவர்கள், தொழிற்சங்க உறுப்பினர்கள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>