மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள போன்டி கடற்கரை சுற்றுலாவுக்கு மிகவும் புகழ் பெற்றது. அங்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை யூதர்களின் பண்டிகை ஒன்று கொண்டாடப்பட்டது. இதற்காக அங்கு ஆயிரக்கணக்கான யூதர்கள் குவிந்து இருந்தனர். அப்போது கூட்டத்தினரை நோக்கி மர்ம நபர்கள் இரண்டு பேர் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர். இதி ல் குழந்தைகள், பெண்கள் உள்பட 15 பேர் பலியாகினர். மேலும், 3 இந்திய மாணவர்கள் உள்பட 40க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் சஜீத் அக்ரம்(50) மற்றும் அவரது மகன் நவீத் அக்ரம்(24) என்பது தெரிய வந்துள்ளது. மேலும், சஜீத் அக்ரம் தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தள்ளது.
இதுகுறித்து தெலங்கானா காவல்துறையினர் வௌியிட்டுள்ள அறிக்கையில், “சஜீத் அக்ரம், நவீத் அக்ரம் இருவரும் பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள். ஐதராபாத்தில் பி.காம். பட்டப்படிப்பு முடித்த சஜீத் அக்ரம் வேலை தேடி கடந்த 27 ஆண்டுகளுக்கு முன் ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்து அங்கு வாழ்ந்து வந்தார். அவர் ஐதராபாத்தில் உள்ள தனது குடும்பத்தினருடன் குறைந்த அளவே தொடர்பு வைத்திருந்தார். சஜீத் அக்ரம் ஆஸ்திரேலிய போலீசாரால் சுட்டு கொல்லப்பட்டார். அவரது மகன் நவீத் அக்ரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆஸ்திரேலியாவில் பிறந்ததால் நவீத் அக்ரம் அந்நாட்டு குடியுரிமை பெற்றிருந்தார். என தெரிவிக்கப்பட்டுள்ளது.
