குமாரபுரம் அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி

குமாரபுரம், டிச.17 : குமாரபுரம் அருகே உள்ள வாழவிளாகம் காஞ்சிரத்துகோணம் பகுதியை சேர்ந்தவர் ஐசக்ராஜ்(57). ரப்பர் பால் வெட்டும் தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். கடந்த 12ம் தேதி பைக்கில் ஐசக்ராஜ் சென்றுக்கொண்டு இருந்தார். காஞ்சிரத்துகோணம் பகுதியில் செல்லும் போது பைக்கில் இருந்த ஐசக்ராஜ் நிலைதடுமாறி கிழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த ஐசக்ராஜை மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் ஐசக்ராஜ் இறந்தார். இது குறித்து கொற்றிக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories: