புதுடெல்லி: அனில் அம்பானி மற்றும் அவரது ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்(ஆர்காம்) நிறுவனத்திற்கு எதிராக பல ஆயிரம் கோடி ரூபாய் வங்கி மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளன.குறிப்பாக பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) புகாரின் பேரில் சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. இதில் சுமார் ரூ.3,000 கோடி வரை கடன் மோசடி நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்த நிலையில் அனில் அம்பானி நிறுவனங்களுக்கு எதிரான பண மோசடி வழக்கை அமலாக்கத்துறை பண மோசடி வழக்கு விசாரிக்கிறது. இது சம்மந்தமாக யெஸ் வங்கி இணை நிறுவனர் ராணா கபூரிடம் அமலாக்க துறை அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர். பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அவருடைய வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று அமலாக்கத்துறை அதிகாரி தெரிவித்தார்.
