ஒன்றிய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள 4 சட்டங்களை கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம்: பொன்குமார் தலைமையில் நடந்தது

சென்னை: ஒன்றிய அரசு நான்கு தொகுப்பு சட்டங்களை கொண்டு வந்துள்ளது. இதற்கு தொழிலாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் ஒன்றிய அரசின் இந்த சட்டங்களை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி சார்பில் நேற்று சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்பாட்டத்திற்கு இளைஞரணி தலைவர் வினோத் பொன்குமார் தலைமை தாங்கினார். போராட்டத்தை விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி தலைவரும், கட்டுமான தொழிலாளர் நல வாரிய தலைவருமான பொன்குமார் தொடங்கி வைத்து கண்டன உரையாற்றினார். இந்த கண்டன ஆர்பாட்டத்தில் விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சியின் பொதுச் செயலாளர்கள் என்.சுந்தராஜ், பொறி.எஸ்.ஜெகதீசன், துணைத் தலைவர்கள் பீ.கே.மூர்த்தி, என்.லட்சுமணன், எஸ்.இந்துமதி, தலைமை நிலைய செயலாளர் து.ரஜினிராஜ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: