நன்மை நல்கும் நங்கநல்லூர் ஆஞ்சநேயர்

“ஆஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத்தாவி அஞ்சிலே ஒன்றாறாக ஆரியற் காக ஏகி
ஆஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலார் ஊரில்அஞ்சிலே ஒன்றைவைத்தான் அவனெம்மை அளித்துக் காப்பான்!’’

சென்னை நங்கநல்லூர் ராம்நகரில் சிறப்பு வாய்ந்த “அருள்மிகு ஆதிவ்யாதிஹர பக்த ஆஞ்சநேயர் திருக்கோயிலில்’’ ஸ்வாமி, விஸ்வரூபமாக பக்தர்களுக்கு அருட்காட்சி தருவது இந்தத் திருத்தலத்தின் அபூர்வ சிறப்பாகும். மேலும்,  ராம ரக்ஷை, பூர்ண வடைமாலை தரிசனத்திற்குப் புகழ்பெற்ற இந்தத் திருக்கோயிலில், இவ்வாண்டும் வழக்கம்போல்  அனுமன் ஜெயந்தி மஹாவிழா வெகு சிறப்புடன் நடைபெற உள்ளது. 11.12.2025 முதல் 21.12.2025 வரை ஆஞ்சநேய சுவாமிக்கு, லட்சார்ச்சனை நடைபெறும்.அதே போல், அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, 13.12.2025 சந்தனக்காப்பு அலங்கார தரிசனம், 15.12.2025 மாலை, யாகசாலை பூர்வாங்க பூஜை தொடக்கம், அனுமன் ஜெயந்தி தினம் வரை ஏழு காலங்களாக மஹாசாந்தி, மூலமந்திர ஜபம், ஹோமங்கள் ஆகியவை அதிவிமரிசையாக நடைபெற உள்ளது.

11.12.2025 முதல் 21.12.2025 வரை தினமும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. குறிப்பாக, தினமும் காலை 8 முதல் 11.30 வரை – மாலை 4 முதல் 8.30 வரை என இருவேளைகளிலும் லட்சார்ச்சனை நடைபெறுகிறது. 14.12.2025 அன்று காலை 7 மணிக்கு சிறப்பு பால் அபிஷேகமும், 15.12.2025 அன்று மாலை 6.15 மணிக்கு யாகசாலை பூர்வாங்க பூஜைகள் ஆரம்பம்.மேலும், 19.12.2025 அனுமன் ஜெயந்தி அன்று, காலை 7.30 மணிக்கு, அனுமன் ஜெயந்தி மங்கள தினம், 8 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம், 9 மணிக்கு 7ம் கால யாகம், யாகசாலை மூலமந்திர யாகம், 11 மணிக்கு மஹாபூர்ணாஹுதி, கிரஹப்ரீதி யாத்ராதானம், கடம்புறப்பாடு, கடதிருமஞ்சனம். 21.12.2025 காலை 11 மணிக்கு லட்சார்ச்சனை பூர்த்தியும், மாலை 7 மணிக்கு சிறப்பு அலங்காரத்துடன் சுவாமி திருவீதி புறப்பாடும் நடைபெறும். பக்தர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இறைவன் அருளைப் பெற வேண்டுகிறோம்!

Related Stories: