திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருப்பது தீபத்தூண் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை: ஐகோர்ட் கிளையில் தமிழ்நாடு அரசு வாதம்

மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருப்பது தீபத்தூண் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என ஐகோர்ட் கிளையில் தமிழ்நாடு அரசு வாதம் வைத்துள்ளது. திருப்பரங்குன்றம் மலையில் ஒரு இடத்தில்தான் தீபம் ஏற்ற வேண்டும். உரிமையியல் நீதிமன்றத்தில் 1923ம் ஆண்டு வழக்கு விசாரணையின்போது தீபம் ஏற்றுவது தொடர்பாக ஏதும் கோரப்படவில்லை. 73 ஆண்டுகளாக உச்சிப்பிள்ளையார் கோயிலில்தான் தீபம் ஏற்றப்பட்டது; எந்த பிரச்சனையும் இல்லை. முந்தைய தீர்ப்புகளை கருத்தில் கொள்ளாமல் தனி நீதிபதி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார் என தெரிவிக்கப்பட்டது.

Related Stories: