சென்னை: தமிழர் மேம்பாட்டை முன்னிறுத்தி தன் அரசியல் பயணத்தை மேற்கொள்ளும் திமுகவுக்கு பக்கப்பலமாக இருப்பது இளைஞர் அணி என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 75 ஆண்டுகளைக் கடந்து தன் அரசியல் பயணத்தை மேற்கொள்ளும் திமுகவுக்கு பக்கப்பலமாக இருப்பது இளைஞரணி. 1980ல் ஸ்டாலினால் தொடங்கப்பட்ட இளைஞர் அணி திமுகவுக்கு வலிமை சேர்த்து களத்தில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. முதற்கட்டமாக வடக்கு மண்டல இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு நாளை மறுநாள் நடைபெறுகிறது என தெரிவித்தார்.
