மதம் மாறி திருமணம்; மாப்பிள்ளை குடும்பத்தை வெட்டிய 9 பேர் கைது..!!

நாகை: மதம் மாறி திருமணம் செய்ததால் மாப்பிள்ளை குடும்பத்தை வெட்டிய பெண்ணின் குடும்பத்தினர் 9 பேர் கைது செய்யப்பட்டனர். பெங்களூரு தப்பிச் செல்ல முயன்ற பெண்ணின் தாய், தந்தை, உறவினர் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். வெவ்வேறு மதத்தைச் சேர்ந்த ராகுல், கீர்த்தனா ஆகியோர் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் பிடிக்காமல் ராகுல், அவரது குடும்பத்தினரை கீர்த்தனா குடும்பத்தினர் சரமாரியாக வெட்டினர். மாப்பிள்ளை குடும்பத்தினரை சரமாரியாக வெட்டி, பெண்ணை தூக்கிச் சென்ற 9 பேரை போலீசார் கைது செய்தனர். மாப்பிள்ளை ராகுல், அவருடைய தாய், தந்தை, உறவினர்கள் ஒரத்தூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: