10.12ம் வகுப்புகளுக்கு 19ம்தேதி திறப்பு விவசாயிகளுக்கு காப்பீடு வழங்க அனைத்து நடவடிக்கை எடுக்கப்படும் கண்காணிப்பு அலுவலர் உறுதி

தஞ்சை. ஜன17:தஞ்சாவூர் திருவையாறு பூதலூர் பட்டுக்கோட்டை பேராவூரணி ஆகிய பகுதிகளில் மழையினால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சுப்பையன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தஞ்சாவூர் ஒன்றியத்தில் சக்கரை சாமந்தம், திருவையாறு ஒன்றியத்தில் கடுவெளி,பூதலூர் ஒன்றியத்தில் இந்தளூர், பட்டுக்கோட்டை ஒன்றியம் புனல்வாசல், பேராவூரணி ஒன்றியம் ஆவணம், ஆகிய இடங்களில் மழையால் பாதித்தநெற்பயிர்களை கலெக்டர் கோவிந்தராவ் முன்னிலையில் மாவட்ட கண்காணிப்புஅலுவலர் சுப்பையன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.பின்னர் விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்த அவர் நிருபர்களிடம் தெரிவித்ததாவது , விவசாயிகளுக்கு எந்தவித சிரமமும் இல்லாத அளவுக்கு காப்பீடு  வழங்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். .வருவாய்த்துறை, வேளண்மைத்துறை, பொதுப்பணித்துறையினர் களத்தில் சென்றுபார்த்து வருகிறார்கள்.நிறைய தண்ணீர் தேங்கியுள்ள இடங்களில் வடிகாலில் உள்ள அடைப்புகளை அகற்றிவருகிறார்கள். வடகிழக்கு பருவமழைக்காக ஒரு குழு அமைத்து இருந்தோம். அந்தகுழுவில் தாசில்தார், துணை தாசில்தார் அளவிலான அலுவலர்கள் பாதிப்புகளைபார்த்து கணக்கெடுத்து வருகின்றனர்.

ஒவ்வொரு தாலுகா அளவிலான குழு இந்த பணியை மேற்கொள்வார்கள். மழையினால்சுவர் இடிந்துவிழுமோ என அச்சப்படுபவர்கள் அருகில் உள்ள நிவாரணமுகாம்களில் தங்கி கொள்ளலாம். மக்களின் உயிருக்கும், பயிருக்கும் உரியபாதுகாப்பு, அதற்கான நிவாரணம் கண்டிப்பாக அரசு வழங்கும். அதனால் விவசாயிகள் எதற்கும் கவலைப்பட வேண்டாம்.3, 4 நாட்களில் முழு பாதிப்பு குறித்து விவரம் தெரியவரும்.பயிர்க்காப்பீடு செய்து இருந்தால் காப்பீடு கிடைக்கும். காப்பீடுநிறுவனத்தினரும் களப்பணியில் ஈடுபடடு வருகின்றனர் என தெரிவித்தார். ஆய்வின்போது சார் ஆட்சியர் பாலசந்தர், வேளாண்மை இணை இயக்குனர் ஜெஸ்டின், உதவி இயக்குனர்இளையபெருமாள், வருவாய் கோட்டாட்சியர் வேலுமணி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Related Stories:

>