விமானங்கள் ரத்தால் பல மணி நேரம் விமான நிலையங்களில் காத்திருந்த பயணிகளுக்கு ரூ.10,000 வவுச்சர் தரப்படும்: இண்டிகோ சலுகை அறிவிப்பு

டெல்லி : விமானங்கள் ரத்தால் பல மணி நேரம் விமான நிலையங்களில் காத்திருந்த பயணிகளுக்கு ரூ.10,000 வவுச்சர் தரப்படும் என இண்டிகோ சலுகை அறிவித்துள்ளது. ரத்தான விமான டிக்கெட்டுகளுக்கான முழு தொகையையும் திரும்ப தரும் பணி நடைபெற்று வருகிறது. டிசம்பர் 3,4,5 ஆகிய தேதிகளில் விமானங்கள் ரத்தால் பாதித்த பயணிகளுக்கு ரூ.10,000 மதிப்பு வவுச்சர் அறிவிக்கப்பட்டுள்ளது. விமான பயணத்தை ரத்து செய்தவர்களுக்கு பணத்தை திருப்பி வழங்கும் நடைமுறை தொடங்கப்பட்டுள்ளன.

இண்டிகோ பயணிகளுக்கு ரூ.10,000 சலுகை

பெரும்பாலானவர்களுக்கு பணம் திருப்பி தரப்பட்ட நிலையில் விரைவில் அனைவருக்கும் பணம் வந்து சேரும். இண்டிகோவின் விமான பயணங்களில் அடுத்த 12 மாதங்களுக்கு ரூ.10,000 மதிப்பு வவுச்சர்களை பயன்படுத்தலாம். 24 மணி நேரத்துக்குள் விமான பயணத்தை ரத்து செய்த பயணிகளுக்கு அரசின் வழிகாட்டுதலின்படி இழப்பீடு வழங்கப்படும். அரசின் வழிகாட்டுதலின்படி பயணிகளுக்கு ரூ.5,000 முதல் ரூ.10,000 வரை இழப்பீடு தரப்படும் என்றும் இண்டிகோ அறிவித்தது.

Related Stories: