பெங்களூரு : இஸ்ரோவின் ஆதித்யா எல் 1 விண்கலம் சக்தி வாய்ந்த சூரிய புயல்களை கண்டுபிடித்து, தரவுகளை அனுப்பி உள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, சூரியனின் வெளிப்புற வளி மண்டலத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் 2ம் தேதி ஆதித்யா எல் 1 என்ற விண்கலத்தை விண்ணில் ஏவியது. இது சூரியனின் வெளிப்புற வளி மண்டலத்தை ஆய்வு செய்து, சூரிய புயல்கள் மற்றும் விண்ணில் உள்ள கரோனல் மாஸ் ஏஜென்ஸ் போன்றவற்றை ஆராய்ந்து வருகிறது.
இந்த நிலையில் சூரியனின் உச்ச செயல்பாட்டு காலத்தை அடுத்த ஆண்டு ஆராய தயாராகி வருகிறது. இதற்கு முன்பாக தற்போது சக்தி வாய்ந்த சூரிய புயலின் மர்மங்களை கண்டுபிடித்து, தரவுகளை அனுப்பி உள்ளது. ஆதித்யா எல் 1 தற்போது கண்டுபிடித்து அனுப்பிய மிகவும் துல்லியமான காந்தப்புலத் தரவுகள் மூலம் கடந்த 2024ம் ஆண்டு மே மாதம் ஏற்பட்ட மிகவும் சக்தி வாய்ந்த சூரிய புயலான, கேனன் புயல், எதிர்பார்த்ததை விட பல மடங்கு சக்தி வாய்ந்தது என்பதற்கான ரகசியத்தை விஞ்ஞானிகள் புரிந்து கொள்ள உதவியுள்ளது.
