நெல்லை: நெல்லையில் உள்ள கடற்படை செயற்கைக்கோள் தகவல் தொடர்பாகத்தில் இஸ்ரோ தலைவர் நாராயணன் இன்று அளித்த பேட்டி: பாரதப் பிரதமரின் அறிவிப்புப்படி 2035க்குள் இந்திய விண்வெளி நிலையம் அமைக்கப்படும். மொத்தம் 5 தொகுதிகள் கொண்ட இதில், முதல் தொகுதி 2028ல் விண்ணில் ஏவப்படும். நெல்லை அருகே குலசேகரன்பட்டினம் ஏவுதளப் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. 2027 தொடக்கத்தில் அங்கிருந்து ராக்கெட் ஏவப்படும். இது ஹரிகோட்டாவிற்கு அடுத்தபடியாக இந்தியாவின் 2வது முக்கிய ஏவுதளமாக அமையும். மேலும், நிலவில் இறங்கி அங்கிருந்து மண் மாதிரிகளை பூமிக்குக் கொண்டுவரும் சந்திரயான்-4 திட்டத்திற்கான பணிகளும் மும்முரமாக நடந்து வருகின்றன என்றார்.
