விளையாட்டு இடஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ துறையில் பல் சுகாதார நிபுணர் பணிக்கான விண்ணப்பம் வரவேற்பு

 

சென்னை: 3% விளையாட்டு இடஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ துறையில் பல் சுகாதார நிபுணர் (Dental Hygienist) பணிக்கான விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. தமிழ்நாட்டில் விளையாட்டு மற்றும் விளையாட்டு வளர்ச்சிக்காக தமிழ்நாடு அரசு பல்வேறு முயற்சிகள், திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டின் சார்பாக ஒலிம்பிக், பிற சர்வதேச அளவிலான போட்டிகளில், தேசிய, மாநில அளவில் பங்கேற்று பதக்கம் பெற்ற விளையாட்டு வீரர்களை ஊக்குவித்திடும் வகையில் அவர்களுக்கு அரசுத் துறைகள், பொதுத்துறை நிறுவனங்களில் (PSUs) 3 சதவிகித இட ஒதுக்கீட்டின் கீழ் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுவருகிறது.

எனவே இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை (S1) விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் அரசுத் துறைகள், பொதுத்துறை நிறுவனங்களில் 3% இடஒதுக்கீட்டின் கீழ் கீழ் வேலை வாய்ப்பு பெறுவதற்கு கீழ்காணும் விளையாட்டுப் போட்டிகளில் 01.01.2018 அன்றோ அல்லது அதன் பிறகு பெற்ற சாதனைகள் தகுதியானவையாக கருதப்படும். குழு விளையாட்டுகளில், மாநில அளவில் குறைந்தது 50% போட்டிகளில் பங்கேற்றிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது.

* சர்வதேச போட்டிகள் (வெற்றிபெற்றவர்கள் / பங்கேற்றவர்கள்)

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்,
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள்
ஆசிய விளையாட்டுப் போட்டிகள்

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியால் (IOC) அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச விளையாட்டு கூட்டமைப்பால் (ISF) 4 ஆண்டுகளுக் ஒருமுறை அல்லது 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்ல ஆண்டுதோறும் நடத்தப்படும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகள்.

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது ஆண்டுக்கு ஒருமுறை, IOC ஆல் அங்கீகரிக்கப்பட்ட ISF இன் கீழ் நடத்தப்படும் காமன்வெல்த் சாம்பியன்ஷிப்கள் போட்டிகள்.

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது IOC ஆல் அங்கீகரிக்கப்பட்ட ISF இன் கீழ் ஆண்டுதோறும் நடத்தப்படும் ஆசிய சாம்பியன்ஷிப்கள் போட்டிகள்

தெற்காசிய கூட்டமைப்பு விளையாட்டுப் போட்டிகள்
பாரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்
ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள்

சர்வதேச பார்வையற்றோர் விளையாட்டு சங்கம் (IBSA) காது கேளாதோருக்கான சர்வதேச விளையாட்டுக் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்ட உலக விளையாட்டுகள் மற்றும் காது கேளாதோர் விளையாட்டுகள்.

* தேசிய அளவிலான போட்டிகள் (வெற்றிபெற்றவர்கள் மட்டும்)

தேசிய விளையாட்டுப் போட்டிகள்.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு கூட்டமைப்புகளால் நடத்தப்படும் தேசிய சாம்பியன்ஷிப் விளையாட்டுப் போட்டிகள்.

* மாநில அளவிலான சாம்பியன்ஷிப்போட்டிகள் (வெற்றிபெற்றவர்கள் மட்டும்)

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் (SDAT) அங்கீகரிக்கப்பட்ட மாநில விளையாட்டு சங்கங்கள் நடத்தும் போட்டிகள். போட்டிகளின் அனைத்து நிலைகளிலும், சீனியர் அளவிலான போட்டிகள் மட்டுமே தகுதியான போட்டிகளாக கருதப்படும்.

விளையாட்டு வீரர்கள் தங்கள் விண்ணப்பத்தை தேவையான ஆவணங்களுடன் பின்வரும் தேதிகளில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளமான www.sdat.tn.gov.inஇல் பதிவேற்றம் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இணையவழி விண்ணப்பத்தை 06.01.2026 அன்று சமர்ப்பிக்க கடைசி தேதி ஆகும்.

Related Stories: