முத்தூர் அருகே வெறிநாய்கள் கடித்து 6 ஆடுகள் பலி

வெள்ளகோவில்: முத்தூர் அருகே வெறிநாய்கள் கடித்து 6 ஆடுகள் பலியாகின. 3 ஆடுகள் படுகாயமடைந்தன. திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அடுத்துள்ள முத்தூர் அமராவதிபாளையம் காரகாட்டு தோட்டம் பகுதியை சேர்ந்த முத்தப்பன் (65) விவசாயி. இவர் விவசாயத்துடன் தனது தோட்டத்தில் 11 செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று மதியம் தோட்டத்தில் ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. அப்போது தோட்டத்து கம்பி வேலியில் புகுந்த வெறி நாய்கள் ஆடுகளை கடித்து குதறியது. இதில் 6 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன. 3 ஆடுகளுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

இது குறித்து முத்தப்பன் மேட்டுப்பாளையம் கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவித்தார். இதன் பேரில் சம்பவயிடத்துக்கு கிராம நிர்வாக அலுவலர் ராமச்சந்திரன் மற்றும் கால்நடை மருத்துவர் பெருமாள் ஆகியோர் விரைந்து வந்து பார்வையிட்டனர். இறந்த ஆடுகளுக்கு கால்நடை மருத்துவர் பெருமாள் பிரேத பரிசோதனை செய்தார். காயமடைந்த 3 ஆடுகளுக்கு சிகிச்சை அளித்தார். பலியான ஆடுகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என முத்தப்பன் உள்பட அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: