திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடக்கம் தினசரி 500 பேருக்கு போட திட்டம்

திண்டுக்கல், ஜன.17: திண்டுக்கல் மாவட்டத்தில் அம்மைநாயக்கனூர், தாடிக்கொம்பு மற்றும் கீரனூர் ஆரம்ப சுகாதார நிலையங்கள், திண்டுக்கல் மற்றும் பழனி அரசு தலைமை மருத்துவமனை ஆகிய 5 இடங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கியது. திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சியை கலெக்டர் விஜயலட்சுமி துவக்கி வைத்தார். மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனர் சிவக்குமார் முதல்நபராக தடுப்பூசி போட்டுக்கொண்டார். இதை தொடர்ந்து மருத்துவக்கல்லூரி டீன், களப்பணியாளர்களில் மருத்துவர், செவிலியர் மற்றும் களப்பணியாளர்கள் ஆகியோருக்கு முதல் கட்டமாக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து வருவாய்த்துறையினர், காவல்துறையினர் மற்றும் முதியோர்களுக்கு படிப்படியாக போடப்படும். மேலும், சீனியர் சிட்டிசன்களுக்கும், அதைத்தொடர்ந்து பொதுமக்களுக்கும் தடுப்பூசி போடப்படும். திண்டுக்கல் மாவட்டத்தில் தினசரி 500 பேருக்கு போட திட்டமிடப்பட்டுள்ளது.

இது குறித்து நலப்பணிகள் இயக்குனர் சிவக்குமார் நிருபர்களிடம் கூறுகையில், ‘திண்டுக்கல்லிற்கு 7,300 தடுப்பூசி பழனிக்கு 5,800 தடுப்பூசி என மொத்தம் மாவட்டத்திற்கு மொத்தம் 13,100 தடுப்பூசி டோஸ்கள் வந்துள்ளன. நேற்று ஊசி போட்டவுடன், 28 நாட்களுக்குப் பிறகு ஒரு தடுப்பு ஊசி போடப்படும். இரண்டாவது தடுப்பு ஊசி போடப்பட்டு 14 நாட்களுக்கு அப்புறம்தான் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். இந்த தடுப்பு ஊசி போட்டாலும் முகக்கவசம், சமூக இடைவெளி, கை கழுவுதல் ஆகியவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

Related Stories:

>