சென்னை: சென்னை மடிப்பாக்கத்தில் நிற்காமல் சென்ற காரை விரட்டி சென்ற காவலர் மேகநாதன் கார் ஏற்றிக் கொலை செய்யப்பட்டார். சோதனையின்போது நிற்காமல் சென்ற காரை மடிப்பாக்கம் போக்குவரத்து முதன்மை காவலர் மேகநாதன் விரட்டிச் சென்றார். பள்ளிக்கரணை அருகே காரை மடக்கியபோது, மேகநாதன் மீது காரை மோதிவிட்டு கார் ஓட்டுநர் மின்னல் வேகத்தில் தப்பினார்.
