முன்னாள் படைவீரர்களின் வாரிசுதாரர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

ஈரோடு,ஜன.17: முன்னாள் படை வீரர்களின் வாரிசுதாரர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். இது குறித்து ஈரோடு கலெக்டர் கதிரவன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:பிரதமரின் கல்வி உதவி திட்டத்தின் கீழ் முன்னாள் படைவீரர்கள் அவர்களது வாரிசுகளின் கல்லூரி படிப்புகளுக்கு கல்வி உதவித்தொகை ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, நடப்பு (2020- 2021) கல்வியாண்டிற்கு பி.எம்.எஸ்.எஸ் (PMSS) கல்வி உதவித்தொகையினை பெற்றிட மேல்நிலைப்படிப்பில் 60 சதவீதம் மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகள் பயன்பெறும் வகையில் விண்ணப்பிக்கும் கால அளவினை வரும் பிப்.,28ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.   எனவே, முன்னாள் படைவீரர்களை சார்ந்த தொழிற்கல்வி பயிலும் சிறார்கள் www.ksb.gov.in என்ற  இணையதளத்தில் அனைத்து ஆவணங்களும் அசலில் பதிவேற்றம் செய்து, அதன் நகலினை முன்னாள் படைவீரர் நல துணை இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு முன்னாள் படைவீரர் நல துணை இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இந்த வாய்ப்பினை பயன்படுத்தி முன்னாள் படைவீரர்களின் வாரிசுகள் பிரதமரின் கல்வி உதவித்தொகை பெற்று பயனடையலாம்.

Related Stories:

>