புனித அமல அன்னை ஆலய தேர்த்திருவிழா

ஈரோடு, டிச.8: ஈரோடு, கால்நடை மருத்துவமனை சாலையில் புனித அமல அன்னை ஆலயம் உள்ளது. பழமையான இந்த ஆலயத்தின் தேர்த்திருவிழா ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு தேர்த்திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதை முன்னிட்டு கோவை மறைமாவட்ட முதன்மை குரு ஜான் ஜோசப் ஸ்தனிஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் சிறுவர், சிறுமிகளுக்கு புதுநன்மை திருவருட்சாதனம் வழங்கப்பட்டது. தொடர்ந்து ஆலயத்தின் முன்பு உள்ள கொடிக்கம்பத்தில் புனித அமல அன்னை உருவம் பதித்த கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன.

 

Related Stories: