பெருந்துறை தொகுதியில் ரூ.2.90 கோடியில் திட்டப்பணிகள்

ஈரோடு, ஜன. 13: பெருந்துறை தொகுதியில் ரூ.2.90 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது. பெருந்துறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சீனாபுரம் ஊராட்சியில் ரூ.6 லட்சம் செலவில் பயணிகள் நிழற்குடை, கல்லாக்குளத்தில் ரூ.6 லட்சம் மதிப்பில் மேல்நிலை தொட்டி திறப்பு விழா மற்றும் குள்ளம்பாளையத்தில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைத்தல், நிச்சம்பாளையத்தில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைத்தல், ரூ.5 லட்சம் செலவில் ஆழ்குழாய் அமைத்தல், வெட்டையன்கிணறு ஊராட்சியில் ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்டுதல், குள்ளம்பாளையம், நிச்சாம்பாளையம், கல்லாகுளம் ஊராட்சிகளில் ரூ.1 கோடியே 90 லட்சம் மதிப்பீட்டில் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தில் குடிநீர் இணைப்பு வழங்குதல் என மொத்தம் ரூ.2 கோடியே 75 லட்சம் மதிப்பீட்டிலான பணிகளுக்கான பூமி பூஜை மற்றும் திறப்பு விழா நடந்தது.  முன்னாள் அமைச்சரும், பெருந்துறை சட்டமன்ற உறுப்பினருமான தோப்பு வெங்கடாச்சலம் கலந்து கொண்டு பூமிபூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய தலைவர் சாந்திஜெயராஜ், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பாலகிருஷ்ணன், ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் உமாமகேஸ்வரன், முன்னாள் தலைவர் பெரியசாமி, ஊராட்சி மன்ற தலைவர்கள் அர்சுனன், வளர்மதி, செல்வம், சங்கீதா, முன்னாள் தலைவர்கள் ஆண்டமுத்து, தாமோதரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>