சமத்துவ பொங்கல் விழாவில் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு: ஆவடி நாசர் அறிக்கை

ஆவடி: திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளர் ஆவடி சா.மு.நாசர் வெளியிட்ட அறிக்கை: ஆவடி கிழக்கு நகரம், கோணாம்பேடு கிராமத்தில் மாபெரும் சமத்துவ பொங்கல் விழா நாளை (14ம் தேதி) மாலை 4 மணியளவில் நடைபெறுகிறது. நிகழ்ச்சியில், கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார். பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி வரவேற்கிறார். ஆவடி கிழக்கு நகர பொறுப்பாளர் பேபி வி.சேகர், ஆவடி தெற்கு நகர பொறுப்பாளர் ஜி.ராஜேந்திரன், ஆவடி வடக்கு நகர பொறுப்பாளர் ஜி.நாராயணபிரசாத், ஆவடி மேற்கு நகர பொறுப்பாளர் பொன்.விஜயன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.மேலும், மாநில மாணவரணி இணை அமைப்பாளர் பூவை சி.ஜெரால்டு, மாவட்ட துணைச்செயலாளர்கள் ஜெ.ரமேஷ், காயத்ரி ஸ்ரீதரன், பொதுக்குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Stories:

>